தமிழில் “ஒருநாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ”டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் காதாநாயகிகளுக்கு முக்கியதும் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஹோலிவுட் திரையுலகத்தில் அறிமுக இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியதும் கொடுக்கும் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால் ஆகியோர் கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஒரு பக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் தங்களுக்கு முக்கியத்துவம் படங்களிலும் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் நிவேதாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.