தற்போது அஜித் பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் அவரின் ரசிகர்கள் சிலர் BJP கட்சியில் இணைந்ததாக அதன் தமிழக தலைவர் தமிழிசை கூறினார்.
இதனை மறுத்து அஜித் அறிக்கை வெளியிட்டார். அரசியலில் தன் முடிவை மிக தெளிவாக கூறிவிட்ட அவரை மற்ற அரசியல் பிரமுகர்களும் பாராட்டினர். அதே வேளையில் அவரின் தைரியத்தை கண்டு சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையின் முன்பகத்தில் விஸ்வாசம் பட அஜித் ஸ்டில்லை போட்டுள்ளனர். மேலும் பா.ஜ.க வலை! அறுத்தெரிந்த அஜித் என தலைப்பு இட்டு கட்டுரை வெளியிட இதற்கு ரசிகர்கள் என்ன கமெண்ட் அடித்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
நியூஸ்னா இப்படி வரணும்.. pic.twitter.com/5oMwFhMbwh
— Trollywood ™ (@TrollywoodOffl) January 23, 2019