ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மதுபாலா. இப்படத்திற்காக அவர் தமிழக அரசின் விருதை பெற்றார். ஆனால் அவரின் முதல் தமிழ் படம் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த அழகன்.
மலையாளம், ஹிந்தி என படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கடைசியாக துல்கர் சல்மான் நடித்த வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருந்தார். தற்போது பாபி சிம்ஹா நடிக்கும் அக்னி தேவ் படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் அவரின் இரு மகள்களின் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் டிவிட்டரில் அவர் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர்களுக்கு அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
— madhoo (@madhoo69) January 22, 2019