பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக தொடர்ந்து அரவான், காலக்கூத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியின் மகளாக வந்து புகழ்பெற்ற தன்ஷிகா தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக உருவாகி வரும் யோகி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். கோவையில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பின்போது பாட்டில் ஒன்றை உடைத்த போது தன்ஷிகாவின் முகத்தில் கண்ணாடி பட்டு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு தற்போது ஓய்வில் உள்ளார். இதனால் யோகி படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை தன்ஷிகாவிற்கு படப்பிடிப்பில் காயம்
