மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏமி ஜாக்சன் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.
இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். சமீபத்தில் ஜார்ஜ் உடன் உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை ஏமி வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இருவருக்குமிடையேயான காதலை உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே ஏமி திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொந்து விவரம் வெளியாகி இருக்கிறது. அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.