பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இருப்பவர் நடிகை கரீனா கபூர். இணையதளத்தில் எப்போதும் இவர் ஹாட்டான சென்ஸேசன் தான். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தைமுர் என்ற மகன் இருக்கின்றார்.
இச்சிறுவன் பற்றி புகைப்படங்கள் அடிக்கடி இணையதளத்தில் வந்து பலரையும் பேசவைக்கும். திருமணம் முடிந்த பின்னும் இன்னும் அதே இளமையுடனும் வேகத்துடனும் கரீனா நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இடையில் விளம்பரங்களில் நடிப்பதை அவர் மிஸ் செய்வதில்லை. எப்போதும் தன்னை பிசியாக வைத்திருக்கும் அவர் அண்மையில் அம்ரிதா அரோராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
இதில் அவர் நீல நிற சட்டை அணிந்து வந்திருந்தார். அதில் Be Fashionable, Be Bold, Be You என எழுதியிருந்தது. இந்த பிராண்டட் சட்டையின் விலை $515 டாலர்களாம். இந்திய மதிப்பில் 36,800 ரூபாயாம். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.