நடிகைகள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக தான் இருப்பார்கள். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அதே நேரத்தில் விழாக்களுக்கு வித்தியாசமான உடையில் வந்த பலரையும் தன் பக்கம் திருப்பிவிடுவார்கள். சில நேரங்களில் ரசிகர்கள் அதை கலாய்த்து விமர்சனங்களை வெளியிடுவார்கள்.
இன்று Ek ladki Ko Dekhs Toh Aisa Laga படம் வெளியானது. இதில் அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சோனம் கபூர் படத்தின் பெயர் தமிழில் எழுதப்பட்டது போல எழுத்துக்கள் கொண்ட புடவையில் வந்தார்.
ரூ 22 ஆயிரம் மதிப்புள்ள இந்த புடவையில் படத்தின் பெயர் ஏக் லடக்கி கோ தேக்கா தோ ஏசா லகா என்பதற்கு பதிலாக ஏக் லடக்கி கோ தேக்கா தொ ஏசா லகா என தவறாக எழுத ரசிகர்கள் அதனை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.