கிரிக்கெட் வீரர்களில் பிரபலமானவர்களுள் ஒருவர் ரோகித் சர்மா. மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2015ல் ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தனக்கு கிளப் ஒன்றில் முத்தம் கொடுத்ததாக பிரபல ஹிந்தி நடிகை சோபியா ஹயாட் கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், நான் ஒரு பட விஷயமாக லண்டன் சென்றிருந்தேன்.
அங்கு ஒரு கிளப்பில் எனது நண்பருடன் நடனமாடி கொண்டிருந்த பொழுது தான் ரோகித்தை முதன்முறையாக பார்த்தேன். எனது நண்பர் தான் ரோகித்தை என்னிடம் அறிமுக செய்து வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டே கிளப்பின் ஓரமான இடத்திற்கு சென்றோம். பிறகு நான் கிளம்புவதாக சொன்னவுடன் எனக்கு அவர் முத்தம் கொடுத்தார் என்றார்,
மேலும், ரோகித் சர்மா சில நாட்கள் எனது வீட்டில் கூட தங்கியுள்ளார் எனவும் சோபியா கூறினார்.