மெர்சல் படம் சர்ச்சையில் சிக்கியபோது மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு பாஜக கட்சியினரால் காட்டப்பட்டது. ஜிஎஸ்டி பற்றி படத்தில் தவறான கருத்து உள்ளது என விஜய்யை தாக்கி பேசினார் அந்த கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
இந்நிலையில் நேற்று பாஜகாவில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலர் இணைந்துள்ளனர். அதற்கு நடந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
“திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்” என தமிழிசை கூறியுள்ளார்.