பேட்ட படம் நல்ல வசூல் ஈட்டியுள்ள நிலையில் நடிகர் ரஜினி அடுத்து முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அதில் அவரது ரோல் என்னவாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினியின் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் வருவார்கள் என கூறப்படுகிறது.
இதனால் வீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தில் பிரச்சனை வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என லதா ரஜினிகாந்த் சென்னை போலீசில் மனு அளித்துள்ளார்.