மாதவன் நடிக்கும் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் இருவரும் சிறப்பு வேடத்தில் நடிக்கின்றார்கள்.
இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். அதேநேரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ் இசையமைப்பில், சிர்ஷா ராய் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகின்றது.
இத்திரைப்படத்தின் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ரொக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான இரகசியங்களை விற்பனை செய்ததாக இவர்மீது கடந்த 1994ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரிவித்து விடுதலை செய்தனர். இவரின் கதையை ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ என்ற பெயரில், 3 மொழிகளில் இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார்.