நடிகர் ஜெயம் ரவியின் 25ஆவது திரைப்படத்தை அகமது இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவிக்கு இவருடைய கதை பிடித்துள்ள நிலையில், அதையே தனது 25ஆவது திரைப்படமாக மாற்றியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
அகமது இயக்கத்தில் ஏற்கெனவே ‘வாமணன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய திரைப்படங்களை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.