நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பில் உருவான ‘கனா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து அவரது இரண்டாவது தயாரிப்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்பொது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு எம்.ஜி.ஆர். நடித்த ‘என் அண்ணன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டைட்டிலை விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் போலவே புரமோஷனும் செய்யப்பட்டுள்ளது.
ரியோராஜ், கலையரசன், விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.