பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டப்சி நடிப்பில் சுஜாய் கோஷ் நடித்த ‘பாட்லா’ திரைப்படம் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் டப்சி பாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதேபோல் அமிதாப் பாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமிதாப் நடித்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடித்து வரும் நிலையில் அமிதாப்பின் இன்னொரு படத்தின் ரீமேக்கில் த்ரிஷா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.