நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகள் மத்தியில் தனித்துவமாக இருப்பவர். அவருக்கென ரசிகர்கள் வட்டாரம் இங்கு மட்டுமல்ல தெலுங்கிலும் உண்டு.
அருந்ததி, பாகமதி என அவர் சோலோவாக நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல கதைகளை தேடி வந்த அவருக்கு பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது.
அவருக்காக திருமணத்திற்கு வீட்டில் தீவிரமாக வரன் தேடி வருகிறார்கள். இதற்காக அவரும் பரிகார தலங்களுக்கு சென்று வருகிறார்.
தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் பிரபாஸின் 20 வது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை நடந்தபோது அனுஷ்கா ஓகே என பேசி முடித்து விட்டார்களாம்.
பாகுபலி படத்தின் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரை பற்றியும் காதல் கிசுகிசுக்கள் அதிகம் வந்தது. ரசிகர்கள் திருமண வாழ்க்கையிலும் இவர்கள் இணைவார்கள் என எதிர்பார்த்து வருகிறார்கள்.
ஆனால் புது படத்தில் ஒரு சில காட்சி தான் என்றதும் ரசிகர்களுக்கு மிகுந்த ஷாக் ஆகியுள்ளது.