வானி போஜன் தெய்வமகள் என்ற ஒரே சீரியலின் மூலம் செம்ம ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார்.
தற்போது சரியான நேரம் பார்த்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிவிட்டார், ஆம், இவர் தற்போது வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார், இதற்கு முன் சின்னத்திரையிலிருந்து வந்த ப்ரியா பவானிஷங்கரும் வைபவ் நடித்த மேயாத மான் படத்தில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.