சினிமா மூலம் ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சிலரே. அதில் ஒருவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் என்.டி.ராமா ராவ். ஆந்திராவின் 10 வது முதலமைச்சராக இருந்தவர்.
இவரை வாழ்க்கை வரலாறு படம் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ல் இரண்டு பாகமாக வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் படத்தின் மீது புகார் அளித்துள்ளார்.
இதில் அவர் என்.டி.ஆர் படம் அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ளது. இதில் கொஞ்சம கூட ஒரிஜினாலிட்டி கிடையாது. அவர் பட்ட கஷ்டங்கள் எதையுமே சொல்லவில்லை.
நந்தமூரி, சந்திரபாபு நாயுடுவை குடும்பத்தாரை நல்ல விதமாக காட்டும் முயற்சிகள் தான் நடந்திருக்கிறது. என்.டி.ஆர் தன் மகன்கள், மகள்கள் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். அவர்களை பற்றியே எப்போதும் நினைப்பவர்.
அவரின் மனைவி பசவதாரகம் இறந்த பிறகு அவரை கவனிக்காமல் கைவிட்டுவிட்டார்கள். அவருக்கு இட்லி என்றால் ரொம்ப பிடிக்கும். ஒருவேளை சாப்பாடு கூட பிள்ளைகளால் அவருக்கு தரமுடியவில்லை.
சொத்துக்களையும் பிடுங்கிகொண்டவர்கள் தன் அப்பாவுக்கு என்ன பிடிக்கும் என யோசிக்காத சுயநலமிகளாகிவிட்டார்கள். இதெல்லாம் படத்தில் சொல்லப்படவேயில்லை.
தெலுங்கில் மற்ற நடிகர்களின் மகன்கள் தன் அப்பா சம்பாதித்தை விட நிறைய சொத்துக்களை சேர்த்துள்ளார்கள். அப்பாவின் பெயர் சொல்லும்படி நடந்துகொண்டார்கள்.
ஆனால் பாலகிருஷ்ணா மட்டும் அவரின் சினிமா வாரிசாக இருக்கிறார். என்.டி,ஆரின் மற்ற மகன்கள் அவரின் புகழை காப்பாற்றவில்லை. அவரின் சொத்துக்களை காப்பாற்றாமல் விற்றுவிட்டனர்.
என்.டி.ஆர் மகா நடிகர். அவரின் நடிப்பிற்கு ஏன் சந்திரபாபு நாயுடு பாரத ரத்னா விருது பெற்று தர முயற்சிக்கவில்லை.என பல கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளார்.
மொத்தத்தில் இப்படத்தின் மூலம் அவரை அவமதித்துள்ளனர் என கூறியுள்ளார்.