ஹைதராபாத்: தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பாயல் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபி படங்களில் நடித்து வந்த பாயல் ராஜ்புட் ஆர்எக்ஸ் 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
முதல் படமே அவருக்கு ஹிட்டாகியுள்ளது. அந்த படத்தில் அவர் படுகவர்ச்சியாக நடித்ததுடன், துணிந்து லிப் டூ லிப் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
பாயல் நடிகை
ஸ்ரீ ரெட்டி துணிந்து பேசத் துவங்கிய பிறகு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறைந்துள்ளது. ஆனால் இன்னும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கத் தான் செய்கிறது. அப்படி ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்தது என்று பாயல் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்
ஆர்எக்ஸ் 100 படம் வெளியான பிறகு எனக்கு பல வாய்ப்புகள் வந்து குவிகின்றது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறினார். என் திறமையால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், உங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று அவரிடம் கறாராக கூறிவிட்டேன் என்கிறார் பாயல்.
பாயல் திறமை
இப்படி ஒருவர் என்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியது எனக்கு கவலை அளித்துள்ளது. ஆர்எக்ஸ் 100 படத்தில் கதைப்படி நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருந்ததால் அப்படி நடித்தேன். அதற்காக கவர்ச்சியாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டி நடிப்பேன், அவ்வளவு தான் என்று பாயல் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.
பாயல் அப்பா
ஆர்எக்ஸ் 100 படத்தில் நான் கவர்ச்சி காட்டியதுடன் முத்தக் காட்சிகளிலும் நடித்ததை பார்த்து என் தந்தை மிகவும் கோபப்பட்டார். என் குடும்பத்தாரும் என் மீது அதிருப்தி அடைந்தனர். ஆனால் தற்போது அவர்கள் சமாதானம் ஆகிவிட்டனர். அதனால் இனி கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதில் பிரச்சனை இல்லை என்று பாயல் கூறியுள்ளார்.
ஸ்ரீரெட்டி கருத்து
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் தற்போது அதிகம் உள்ளது. முன்னணி நடிகைகள் கூட படுக்கைக்கு சென்றால் தான் வாய்ப்பு பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் பாயல் ராஜ்புட் இப்படி ஒரு புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.