இப்போதெல்லாம் சின்னத்திரை பிரபலங்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது. தற்போது முக்கிய சானல் ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் Zee சானலை சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளினினி ராதிகா கௌசிக். இவர் வெள்ளியன்று அதிகாலை 3.30 மணியளவில் 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையறிந்த பாதுகாவலர்கள் போலிசில் புகார் கொடுக்க உடனே காவல் துறை நேரில் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. நொய்டாவில் அவர் கடந்த 4 வருடங்களாக வசித்து அடுக்கு மாடி குடியிருப்பில் தான் இப்படியான சம்பவம் நடந்துள்ளது.
மேலும் அவருடன் அவரின் நண்பர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகுல் என்பவரும் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் நடந்துள்ளது. ராகுல் பாத்ரூம் சென்ற போது தான் ராதிகா மாடியிலிருந்து குதித்துள்ளாராம்