தமிழ் தொலைக்காட்சிகள் சீரியல் வரலாற்றில் பெரும் புரட்சி செய்தவர் நடிகை ராதிகா. ராடன் என்னும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் பல சீரியல்களை தந்துள்ளார்.
அதில் சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை என அவரின் சிரியல்களை லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.
தற்போது அவர் நடிப்பில் சந்திரகுமாரி வரலாற்று சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது வரிஅ வர் 3,430 மணி நேரம் சின்னத்திரையில் நடித்துள்ளாராம்.
மேலும் 6,850 எபிசோடுகளில் நடித்துள்ள ஒரே நடிகை என குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிரேக் கொடுத்து விட்டு பின் புதிய பரிமாணத்தில் வரப்போவதாக டிவிட்டரில் கூறியுள்ளார்.
I have acted in 6850 episodes till today, that is 3430 hours only in television, proud to be the only actress to have done it. I am taking a short break for 2 months , a well deserved one. Back in June 9.30pm on #SunTV in a new avatar. Thanks for the immense love.
— Radikaa Sarathkumar (@realradikaa) March 9, 2019
#chandrakumari will continue at 6.30pm from 18th March on #SunTV.Please keep watching and enjoying as always????????????
— Radikaa Sarathkumar (@realradikaa) March 9, 2019