நடிகர் சந்தானத்திற்கு என அப்போதிருந்து இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிகராக இருந்த பல எபிஷோடுகளில் நடித்து வந்தவர் காமெடியனான கலக்கி வந்தார்.
தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் இன்று தில்லுக்கு துட்டு 2 படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் புதுமுயற்சி எடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக படம் பார்க்க வந்தவர்கள் ஆயிரம் பேருக்கு துணிப்பைகளை கொடுத்து பிளாஸ்டிக்கை ஒழிப்பு பிரச்சாரம் செய்துள்ளனர்.