ஸ்டார் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் மஞ்சுஷா மோகன்தாஸ்.
இவரும் இவரது தோழி அஞ்சனாவும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது தவறான பாதையில் வந்த வேன் அவர் மீது மோசமாக மோதியுள்ளது.விபத்து ஏற்பட்ட உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அதோடு ஒரு வாரமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மஞ்சுஷா சிகிச்சை பலன் இன்றி நேற்று (ஆகஸ்ட் 2) உயிரிழந்துள்ளார்.சின்ன வயதில் இவருக்கு வந்த மரண செய்தி கேட்டு பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
பிரியதர்ஷன் என்பவருடன் திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.