பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இயக்கவுள்ளார்.
இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஸ் தெரிவிக்கும் போது, ‘இந்தி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சவாலான வேடங்களை தெரிவு செய்தே நடித்து வருகிறேன். இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதியை இந்த படம் பேசும்’ என தெரிவித்துள்ளார்.