ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் நடித்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஹிந்தி சினிமாவை சேர்ந்த இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரின் அப்பா நடிகர் சத்ருஹன் சின்ஹா. இவர் பா.ஜ.க வை சேர்ந்த மத்திய மந்திரி. இந்நிலையில் சோனாக்ஷி சில நாட்களுக்கு முன் அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ 18 ஆயிரம் மதிப்பிலான ஹெட் செட்டை முன்பதிவு செய்து வாங்கியுள்ளார்.
குறித்த நாளில் அவருக்கு வீட்டிற்கு பார்சல் வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த சோனாக்ஷி ஹெட் செட்டிற்கு பதிலாக உள்ளே இருந்த பழைய துருப்பிடித்த இரும்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.
உடனே சமூக வலைதளத்தில் இதனை அவர் பகிர சம்மந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு ஆர்டர் செய்த பொருளை ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளது.
Anybody want to buy a brand new shiny piece of junk for 18,000 bucks? (Yup, its a steal) Dont worry, im selling, not @amazonIN, so ull get exactly what you’re ordering. pic.twitter.com/3W891TA7yd
— Sonakshi Sinha (@sonakshisinha) December 11, 2018