பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில் அவர், “தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை அதிகரிக்க உதவ வேண்டும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை பிரதமர், பல அரசியல் தலைவர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் தனித்தனியாக டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார்.
அதேநேரம், இந்த டுவீட்டுக்கு பல பிரபலங்கள் தற்போது ஆதரவு தெரிவித்து தங்களால் முடிந்த அளவு வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக கூறியுள்ளனர்.
அந்த வகையில் பிரதமரின் இந்த வேண்டுகோளை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ‘நிச்சயம் செய்து காட்டுவோம்’ நன்றி’ என்று பதிலளித்து தேசிய கொடியையும் அவரது டுவிட்டில் பதிவு செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.