சென்னை: மகத் சொன்னதை பார்த்துவிட்டு பிராச்சி மிஸ்ரா டிவியை ஆஃப் செய்திருப்பாரோ என்று நெட்டிசன்கள் பேசத் துவங்கியுள்ளனர். மகத், யாஷிகா இடையேயான காதலை கமல் முன்பே கண்டுபிடித்துவிட்டார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை காதலிக்கிறார். அவ்வப்போது கேமராவுக்கு முன்பு வந்து பிராச்சி உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்பார். இந்நிலையில் யாஷிகா மீதும் காதல் வந்துவிட்டதாக கூறியுள்ளார் மகத்.
மகத், யாஷிகா பற்றி நெட்டிசன்கள் பிராச்சியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவரோ அது நட்பு மட்டுமே, அவர்கள் செய்வதை பார்க்க பிடிக்கவில்லையை என்றால் டிவியை ஆஃப் செய்ய வேண்டியது தானே என்று கூலாக பதில் அளித்தார். பாவம், தற்போது மகத் கூறியுள்ளதை கேட்டு அந்த பெண் என்ன வேதனைப்படுகிறாரோ.
Mahath lover
Switch off ur tv #Mahath gentleman ?#Mahath : i love yaashika#YaashikaArmy : ????#BiggBossTamil2 #BiggBoss2
Follow @BigbossPart02 pic.twitter.com/GD8nmeXBaB
— Big Boss Tamil 2 (@BigbossPart02) August 21, 2018
மகத், பிராச்சி, யாஷிகாவை வைத்து மீம்ஸ் போடத் துவங்கி விட்டனர். மகத்திற்கு யாஷிகா மீது காதல் உள்ளது என்பதை கமல் முன்பே கண்டுபிடித்துவிட்டார். யாஷிகா தனது காதலை ஒப்புக் கொண்ட அன்றே கமலுக்கு மகத்தின் மனதில் என்ன உள்ளது என்பது தெரிந்துவிட்டது. அதை வெளிப்படையாக கூறாமல் சூசமாக பேசினார். இதை எத்தனை பேர் நோட் செய்தீர்கள்?
எது நிஜம்?! ?? #பிக்பாஸ் – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/uE1is7Oxll
— Vijay Television (@vijaytelevision) August 21, 2018
மகத் இரண்டு பெண்களை காதலிப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்கிறார்கள். இத்தனை நாட்களாக மகத்தின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக பேசிய பிராச்சி இனியும் காதலை தொடர்வாரா?
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் காதல் ஜோடிகள் உருவாகினர். ஆனால் அந்த காதல் எல்லாம் நிகழ்ச்சி முடியும் வரை தான் இருந்தது. ஒரு வேளை இந்தியை காப்பியடித்து இதுவும் ஸ்கிரிப்டாக இருக்குமோ? யார் கண்டது.