தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர் என்றால் லொஸ்லியா தான். பிக்பாஸ் தொடங்கிய முதல் நாளே இவருக்கு ஆர்மி வைக்கும் அளவிற்கு சென்று விட்டார்.
சமீபத்தில் அவர் கடந்து வந்த பாதையினைக் கூறிய போது ஒட்டுமொத்த பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தவராகவே மாறிவிட்டார். அக்காவின் தற்கொலை, அப்பாவின் பிரிவு என பல வலிகளைக் கடந்த வந்துள்ளார்.
இந்நிலையில் லொஸ்லியாவின் தோழி ஒருவர் அவரைப் பற்றிய சில தகவல்களைக் கூறியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா தனது குறும்புத்தனத்தினாலும், எதார்த்தமான செயல்களாலும் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளார்.
மேலும் அவரது தோழி தர்ஷி கூறுகையில், அவரைக் காணும் போது பெண்ணாகிய எனக்கே அவளை ரொம்ப புடிக்கும். பள்ளிப் பருவத்தில் இருந்து தனது தமிழ் பேச்சுத் திறமையினால் இன்று பிக்பாஸ் வரை சென்றுள்ளதாக கூறுகின்றார்.
அதுமட்டுமின்றி அவர் இருக்கும் இடத்தினை எப்பொழுதுமே சந்தோஷமாகவே வைத்துக் கொள்வார். தற்போது அவரது குடும்ப உறவினர்கள் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டாலும் தற்போது கவலையாகவே இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அவர் நடனமும் அவரது சிறு வயதிலிருந்தே உள்ளது என்றும் இடம், பொருள், ஏவல் என எதுவும் கண்டுகொள்ளாமல் சிறிது கூட வெட்கப்படாமல் நடனமாடுவார். தற்போது வரை யார் மீதும் காதலில் விழவில்லை என்றும், உள்ளே காதலில் விழ மாட்டார் என்றும், அவர் சிரிப்பதற்கு மட்டுமே உள்ளே சென்றுள்ளார்… காதலில் விழுந்து அழுவதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.