கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர் நடகர் சக்தி. இவர் பேசிய ட்ரிக்கர் என்கிற வார்த்தை தமிழ்நாடு முழுவதும் அதிகம் பிரபலமானது.
பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு புதிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் உள்ள அவர், தற்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி போலீசில் சிக்கியுள்ளார்.
அவர் இன்று கார் ஓட்டி செல்லும்போது சூளைமேடு இளங்கோவடிகள் நகரில் ஒரு காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். காரை பொதுமக்கள் வழிமறித்தபோது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் அவரை போலீசில் ஒப்படைத்துள்ளனர். அண்ணா நகர் போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர்.
Update: விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.