பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் நட்புடன் மட்டுமே இருந்தாலும் மற்றவர்கள் அவர்கள் காதலில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டு ஷெரின் இது பற்றி விளக்கம் கொடுத்தார். எங்களுக்குள் நட்பு மட்டும் தான் என கூறிவிட்டார் அவர்.
இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார்.
தர்ஷன் பற்றி இவர் அளித்த பேட்டிகள் தான் பிக்பாஸில் மற்றவர்கள் தர்ஷனை டார்கெட் செய்ய காரணம் என தர்ஷனுக்கு நெருக்கமான ஒருவர் கூறினாராம். இதனால் மனமுடைந்து இந்த முடிவெடுத்துள்ளதாக சனம் ஷெட்டி கூறியுள்ளார்.