மாஸ் ஹீரோ விஜய்க்கு சினிமாவில் பெரும் மார்க்கெட் உள்ளது. தீபாவளிக்கு வெளியாகப்போகும் பிகில் படம் பெரும் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் அவர் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இணையதளத்தில் சாதனை செய்தது. ரசிகர்கள் அதனை டிரெண்டிங்கில் இடம் பெற செய்துவிட்டார்கள். அவருக்கு பெரும் ரசிகர்கள் பலம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
அவரை பற்றி பலரும் பேசாத மேடைகள், நிகழ்ச்சிகள் இருக்காது. டிவி சானலில் பல குரலில் மிமிக்ரி செய்தும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் சதீஷ்.
அவரும் விஜய் ரசிகராம். பிகில் படத்தில் வரும் அப்பா விஜய் போல அவர் கெட்டப் போட்டு கலைஞர் தொலைக்காட்சியில் சுமோ படக்குழுவின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.