அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது சமூக வளையதளங்களில் கசிந்துள்ளது.
இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் தற்போது சமூக வளையதளங்களில் கசிந்து ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்களே சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றனர்.
இந்த படத்தில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்த சிங்கள் ட்ராக் விரைவில் வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துவருகின்னறார். அதாவது கால்பந்தாட்ட வீரர் மற்றும் தாதா போன்ற வேடத்திலும் நடிக்கிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் தீபாளவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளளார். இதில் நடிகை நயன்தாரா, ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகின்றனர்.