தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார் நடிகர் ஜீவா.
தற்போது கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கும் 83 படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறாராம்.