நடிகை சுவேதா பாசுவை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து வந்தார்.
ஹைதராபாத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய இவர் சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் இருந்து பின் வீடு திரும்பினார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரப்பரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. அவரும் கிடைத்த படங்களில் நடித்து வந்தார். இவருக்கு அதே சினிமாவை சேர்ந்த இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மத்ததுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
பின்னர் இருவரும் பாலி தீவுகளில் ஜோடியாக சுற்றி வந்ததை காண முடிந்தது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு புனேயில் பெங்காலி முறைப்படி திருமணம் நடைபெற்றது.
உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.