தமிழ் சினிமாவில் நடிக்க வந்த இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். அண்மையில் இவரின் பெயரை Mee Too பாலியல் சர்ச்சையில் அதிகம் கேட்டிருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள்.
நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். 2015 ல் நிபுணன், விஷ்வமய என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் நடித்த போது அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகாரும் அளித்திருந்தார்.
இந்நிலையில் நான் புகார் கூறியதற்கு முன்னால் வாரத்துக்கு 3 படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் புகார் சொன்ன பிறகு யாரும் வரவில்லை. பட வாய்ப்புகள் முழுமையாக நின்று விட்டன என கூறி கவலைப்பட்டுள்ளாராம்.