“பாகமதி” படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா படங்கள் ஒப்புக்கொள்வது கிடையாது. திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தியதால் தனது சினிமா பயணத்தை நிறுத்திவைத்திருந்தார். சமீபத்தில் தான் அவர் சிம்புவுக்கு ஜோடியாக விடிவி 2 படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது.
இந்நிலையில் அனுஷ்கா மற்றொரு மெகா பட்ஜெட் தெலுங்கு படத்தையும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் 152வது படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். அந்த படத்தில் தான் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
படத்தின் கதையை கேட்ட அனுஷ்கா சில நிமிடங்களிலேயே நடிக்க ஒப்புக்கொண்டாராம். இயக்குனர் கொரட்டாலா சிவா சமீபத்தில் ஸ்ரீரெட்டியின் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடதக்கது.