கடந்த மாதம் இந்திய காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தில் இருந்து அபிநந்தன் என்ற விமானி பாகிஸ்தானிற்குள்ளேயே மாட்டி கொண்டார்.
அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம் சில நாட்களுக்கு பின் விடுவித்தது. இந்த சம்பவங்களால் நாட்டில் உள்ள அனைத்து துறைக்களும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
சினிமாவிலும் பாலிவுட்டினர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தியவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். அப்படிதான் பாலிவுட் நடிகர் சல்மான்கான் தயாரித்துவரும் நோட்புக் என்ற படத்திலிருந்து பாகிஸ்தான் பாடகர் அதிப் அஸ்லாம் என்பவர் பாடிய முழு பாடலையும் படத்திலிருந்து தூக்கிவிட்டு சல்மான்கானையே மீண்டும் அந்த பாடலை பாட வைத்து படத்தில் சேர்த்துள்ளனர்.