திருமணமான பிறகு நடிகை நமீதா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் இந்நிலையில் அவர் தற்போது தமிழில் அகம்பாவம் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தில் நமீதா ரசிகர்கள் எதிர்பார்க்கும் கிளாமர் வேடத்தில் நடிக்கவில்லையாம் இதில் ஒரு தைரியமான பெண் பத்திரிகையாளராக நடித்து வருகிறாராம் மேலும் படத்தில் அரசியல்வாதிகளுடன் போதும் ஆக்சன் காட்சிகளும் இவர் நடித்துள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது
மேலும் அகம்பாவம் படத்தில் நடிகை நமீதாவின் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும் என்றும் இந்த படம் நமிதாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நமீதா என்றாலே கிளாமர் காட்சிக்கு பெயர் போனவர் ஆனால் இந்தப் படத்தில் அவர் கிளாமர் இல்லாமல் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
நமீதா விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதன் பிறகு பில்லா,அழகிய தமிழ் மகன்,வியாபாரி,ஏய்,சாணக்கியா,ஆணை,ஜெகன்மோகினி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நமீதா ரசிகர்கள் மீது உள்ள அன்பால் அவர்களை மச்சான் என்று செல்லமாக அழைப்பார்