சினிமா, விளம்பரம் என பல குழந்தைகள் பல்வேறு காட்சிகளில் நடித்தாலும் ஒருசில குழந்தைகள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதும், மக்கள் மனதில் இடம் பிடிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் சினிமா, விளம்பரம் என மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் யுவினா.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் கயல்விழி என்று ஒரு குழந்தை நடித்திருக்கும் அந்த குழந்தை யுவினா. அதேபோல சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலா மணியில் நடிகர் சூர்யாவிற்கு குழந்தையகா நடித்திருப்பார் இந்த யுவினா. யார் இந்த யுவினா? இவரது பெற்றோர் யார்? வாங்க பாக்கலாம்.
2008ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் யுவினா. இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். யுவினாவின் அப்பாவிற்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க ஆசை. 2013ஆம் ஆண்டு உறவுக்கு கை கொடுப்போம் என்ற ஒரு சீரியலில் நடித்தார் யுவினா. அதன் ஒரு படங்களில் நடிப்பதற்கென சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார் அவரது அப்பா.