கவர்ச்சியாக படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீது சந்திரா. சோப் விளம்பரத்தில் நடித்த இவர் விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இளைஞர்கள் மத்தியில் இவரின் பெயருக்கு நல்ல ரீச்.
பல ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் மாதவன் நடித்த யாவரும் நலம் படத்தின் தமிழுக்கு வந்தார். பின் தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை என படங்களில் நடித்துள்ளார்.
சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தில் பாடலுக்கு நடனமாடியதோடு வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரு கெட்டப்பில் நடித்திருந்தார். தற்போது அவரின் கையில் படங்கள் இல்லை. இந்நிலையில் அவர் ஆட்டோ, ரிக்ஷா, டேக்சி டிரைவர்கள் புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு செய்துள்ளார்.
Initiated the Camp for #auto #rickshaw n #taxi #drivers Let’s get #tobaccofree and safe our families ! Fight against #cancer ? #freecheckups #cpaa #midday ?? pic.twitter.com/OgIipp0e2G
— Neetu N Chandra (@Neetu_Chandra) January 8, 2019