ஆதி திரைக்களம் என்ற திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள ‘முந்திரிக்காடு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் சீமான் பொலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த விழாவில் மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மூவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட சீமான் கருத்து தெரிவிக்கையில், ”மு.களஞ்சியத்தின் கனவுப் படைப்பாக இந்த ‘முந்திரிக்காடு’ படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கின்றேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன். காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த ‘முந்திரிக்காடு’ படம் ‘பரியேறும் பெருமாள்’ ஏற்படுத்திய தாக்கத்தைவிட அதிகத்தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.
ஏ.கே.பிரியனின் இசையில் மு.களஞ்சியம், எழுத்தாளர் இமயம் எழுதிய ‘பெத்தவன்’ நாவலை முந்திரிக்காடு’ என்ற பெயரில் திரைப்படமாக்கியுள்ளார்.
முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இத்திரைப்படம்பதிவு செய்துள்ளது.
நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன், பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.