சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்துடன் மோதுகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அவர் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு தான் அவருக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டமே. அடுத்தவாரம் பேட்ட படம் வெளியாகும் முன்பே அவர் சென்னைக்கு வந்து விடுவார் என நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
அடுத்தாக பல படங்களில் அவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இயக்குனர் முருகதாஸ் உடன் அவரின் படம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் அரசியல் முடிவு பற்றி அறிவித்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் எப்போது கட்சியை தொடங்குவார் என எதிர்பார்ப்பு உள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லையாம். அதனையடுத்து அவர் கட்சி வேலைகளில் தீவிரமாக இறங்கவுள்ளாராம். கட்சிக்கொடி, பெயர், கொள்கைகள் எல்லாம் ரெடியாகிவிட்டதாம். 2021 ல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகிவருகிறாராம்.