நடிகர் ராதா ரவி தற்போது டப்பிங் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இந்நிலையில் சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல் நாளை ஜனவரி 26 ல் நடைபெறுகிறது. இதில் இப்போதைய தலைவர் சிவன் தலைமையிலும் ஒரு அணி போட்டியிடுகிறது.
அதே வேளையிலும் போஸ் வெங்கட் அணி, நடிகை நிரோஷா அணி, ரவி வர்மா அணி நான்கு அணிகள் களத்தில் இறங்குகின்றன. இதில் நிரோஷா அணி வேட்பாளரை அறிவித்ததோடு ராதா ரவி புகைப்படத்தையும், நளினி புகைப்படத்தையும் போட்டு ஓட்டு கேட்டிருக்கிறார்கள். இது குறித்து போஸ் வெங்கட் அணி கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அந்த அணியின் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நவீந்தரிடம் பேட்டி காணப்பட்டது. இதில் அவர் நிரோஷா அணி தேர்தலில் ஜெயிக்க இப்போதே தில்லு முல்லு வேலைகளை செய்ய தொடங்கிவிட்டார்கள். நளின் அம்மா போட்டாவ போட்ட இவங்க தான் அவங்க தலைவரா இருந்த போது அவங்கள சங்கத்த விட்டு வெளியேற்ற முயற்சி எடுத்தவங்க.
இது குறித்து நளினி அம்மாவே எங்களிடம் புலம்பினாங்க. என்ன கேட்கமலேயே என பேர போட்டுருக்காங்க என கூறினார். மேலும் இதிலிருந்தே ராதா ரவி அண்ட் கோ பதவிக்காக என்ன வேண்டுமாலும் செய்வாங்கனு காட்டுது என கூறியுள்ளனர்.