தமிழ் பேசும் நாயகியான ப்ரியா ஆனந்த், சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி என்று எதுவும் அமையவில்லை. இதற்கிடையே சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ‘எதிர் நீச்சல்’ வெற்றி பெற்றதை தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும், அப்படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாகவே அமைந்தது.
இதற்கிடையே, ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த், திரீரென்று மாயமானார். அவருக்கு தமிழ்ப் பட வாய்ப்புகளை குறைந்த நிலையில், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘எல்.கே.ஜி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படத்தில் அவரது வேடம் பெரிதாக எடுபடவில்லை.
தற்போது விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த், தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணத்தை கூறும்போது, ”தமிழில் கவனத்தை குறைத்து மற்ற மொழிகளில் நடிக்க துவங்கினேன். எல்கேஜியில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். அது மிகவும் எனக்கு பிடித்திருந்தது.
அதேபோல் தான் ஆதித்ய வர்மாவிலும். அதனால் இனிமேல் வழக்கமான நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்க போகிறேன்.” என்று தெரிவித்தார்.