ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை தமன்னா. இப்போதெல்லாம் இவரை முன்னணி ஹீரோக்களின் படங்களில் பார்க்கமுடிவதில்லை. மார்க்கெட் காலியாகி தொலைகாட்சி விளம்பரம், கடை திறப்பு விழாக்கள் என கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார் அம்மணி.
பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவரை தேடி மிக குறைந்த அளவில் தான் வாய்ப்புகள் வருகிறது. தற்போது குயின் தெலுங்க்கு ரீமேக்கில் அவர் நடித்து வருகிறார். அடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக பார்த்திபன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தமன்னா.
இந்நிலையில் அவர் அடுத்து ஒரு கன்னட படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளார். யாஷ் நடிக்கும் KGF என்ற படத்தில் தான் தமன்னா நடனமாடவுள்ளார். தமன்னா சில தெலுங்கு படங்களில் இப்படி ஆகியிருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளதால் தான் இப்படி ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் விமர்சனம் வர ஆரம்பித்துள்ளது.
மேலும், தனது சம்பளத்தையும் குறைத்துக்கொண்டிருக்கும் தமன்னா படத்திற்கோ அல்லது பாடலுக்கோ எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானலும் காட்ட தயார் என்ற நிலையில் உள்ளார்.
சம்பளத்தில் தள்ளுபடியும், கவர்ச்சியில் போனஸும் கொடுக்கும் தமனாவிற்கு பட வாய்ப்புகள் தற்போது கணிசமாக கிடைத்து வருகின்றன