பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ன் போட்டியாளர் இருந்து டைட்டில் வென்றவர் ஆரவ். அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஓவியாவின் நெருங்கிய நண்பராகிவிட்டார்.
தற்போது ராஜ பீமா என்னும் படத்தில் நடித்து வருகிறார். யானையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகளை தாய்லாந்திலும், மற்ற காட்சிகளை தமிழ் நாட்டின் பொள்ளாச்சியிலும் எடுக்கப்படுகிறது. கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரி காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆரவ் பீட்டர் என்னும் யானையுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அவர் எதிர்பாராத விதமாக யானை மேலிருந்து கீழே தவறி விழுந்தார். உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லாமல் படத்தில் நடித்து வருகிறாராம்.