பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுநாள் வரை நடிகை வனிதா அதிகம் காட்டப்பட்டார். அவர் வெளியேறியதில் இருந்து மீராமிதுன் அவரது இடத்தை பிடித்துள்ளார் என்று கூறலாம்.
அதாவது எப்போதும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டு அழுதுகொண்டே இருக்கிறார். இன்று காலை வந்த புதிய புரொமோவும் அவரை தான் அதிகமாக காட்டப்படுகிறது.
மீராமிதுன் இதற்கு முன்னரே விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறார், அங்கேயும் பிரச்சனை தான். அது வேறு எந்த நிகழ்ச்சியில் இல்லை, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி தான்.
8வது சீசனில் இவர் பங்குபெற அப்போது தன்னுடன் நடனம் ஆடியவரை குறை கூறுகிறார், இதைப்பார்த்த நடுவராக இருந்த சங்கீதா, மீரா மிதுனை குறை கூற வேண்டாம் முதலில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுங்கள் என்கிறார்.
மீராவும் அழுதுகொண்டே வெளியே செல்கிறார், திடீரென இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.