சர்கார் படம் முடிந்த கையோடு விஜய் ரசிகர்கள் தற்போது விஜய் 63 படத்திற்காக பிசியாகிவிட்டார்கள். அட்லீ இயக்கத்தில் விஜய் படப்பிடிப்பில் இணைந்துவிட்டார். இதனால் தற்போதே ரசிகர்கள் அடுத்தடுத்து அப்டேட் கேட்டு வருகிறார்கள்.
அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அட்லீயும் விஜய்யின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் விஜய் ரசிகர் தான்.
அவர் நடிப்பில் சர்வம் தாள மயம் படம் வரும் ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது. இதில் பரபரப்பான காட்சியில் போலிஸ் அதிகாரி ஒருவரே நானே மிகப்பெரிய விஜய்யின் ரசிகண்டா என கூறுவாராம்.
அதுமட்டுமல்ல விஜய்யின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியிருப்பதை திறந்து காட்டுவாராம்.