நாகினி சீரியல் இந்தியா முழுவதும் அதிகம் பிரபலம். கற்பனையான கதை என்றாலும் அதை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.
ஹிந்தியில் ஒளிபரப்பப்பட்டுவரும் நாகினி 3 தற்போது டிஆர்பியில் இந்திய அளவில் 4வது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தயாரிப்பாளர் ஏக்தா கபூர் நாகினி 3 சீரியலை அடுத்த மாதத்திற்குள் முடிக்க முடிவெடுத்துவிட்டாராம். தன் அடுத்த சீரியல் Kavach 2 எடுக்க தற்போதே பணிகளில் இறங்கிவிட்டாராம் அவர். தமிழில் மாய மோஹினி என்ற பெயரில் ஒளிபரப்பான சீரியலின் இரண்டாம் பாகம் தான் அது.
நாகினி3 அவசரமாக முடிக்கப்படுகிறது என பரவி வரும் தகவல் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.