உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோல்டி தற்போது இயக்கி வரும் படம் கொலையுதிர் காலம். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்திற்குள் வந்துள்ளார். தமிழ், ஹிந்தியில் தயாராகியுள்ள இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் பிரபுதேவா மற்றும் தமன்னா நடித்துள்ளனர். தமிழில் நயன்தாரா நடித்திருக்கிறார்.
இந்திய பெண்ணான நயன்தாரா லண்டனுக்கு செல்கிறார். அங்கு ஒரு பிரச்னையில் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். பின்னர் எப்படி போராடி அந்த பிரச்னையில் இருந்து தப்பித்து இந்தியா வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. ஒரே இரவில் நடக்கும் இந்த கதையில் நயன்தாரா ஆக்சன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். செம் மாஸாக உருவாகி உள்ளது இத்திரைப்படம்.
ஜனவரியில் திரைக்கு வரும் இந்தப்படம் நயன்தாரா நடித்த படங்களில் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.