தோற்றத்தில் வித்தியாசம், தலைமுடியில் வித்தியாசம், நடிப்பில் வித்தியாசம், சொல்லும் கருத்துக்களும் வித்தியாசம் இப்படி வித்தியாசங்களை அள்ளிவீசி தமிழ்திரை ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகிவிட்டார் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணை யான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிகவேக மாக 50 படங்களை கடந்து 100வது படத்திலும் நடித்து வருகிறார்.
இவரும், நயன்தாராவும் நடித்திருந்த `கோலமாவு கோகிலா’ படத்தின் `கல்யாண வயசு’ எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்ஆனது. நயன்தாராவை யோகிபாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவதுபோல அமைந்த இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதிஇருந்தார்.
கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பைப் பார்த்து வியந்த நயன்தாரா, எல்லாப் படத்திலும் யோகிபாபுவை நடிக்கவைக்க சிபாரிசு செய்துள்ளார். அடுத்து நயன்தாரா நடிக்க உள்ள பேய் படம் ஒன்றில் யோகிபாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் கூறி இருக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்ட யோகிபாபு, நயன்தாராவை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்றுள்ளார். அங்கு சற்று உணர்ச்சி வசப்பட்டு, நயன்தாராவின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி மகிழ்ந்தாராம். அதன்பிறகு, தான் செய்தது தவறு என்று உணர்ந்த யோகிபாபு நன்றி கேட்க வந்த இடத்தில் மன்னிச்சுடுங்க மேடம் என்று கேட்டுக் கொண்டாராம்.
ஆனால் நயன்தாராவோ முதலில் கோபப்பட்டாலும், அதன் பிறகு யோகிபாபுவின் நிலைமை புரிந்துகொண்டவராய் சிரித்து விட்டாராம். இந்த சிரிப்பு யோகிபாபுவை மன்னித்து விட்டதாக அர்த்தம்.
நயன்தாராவின் இந்த பெருந்தன்மையை எண்ணி வியந்த யோகி பாபு, தனது கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும், இனி நயன்தாராவுக்காக எத்தனை படங்களுக்கு வேண்டுமானாலும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் கால்ஷீட் தருவதற்கு மகிழ்ச்சியோடு சம்மதிப்பதாக தெரிவித்துள்ளார்.